முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, போலி ஆவணங்களைபயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, சந்தேகநபர் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஆடம்பரவாகனங்களுடன் பிடிபட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர், மேலதிகவிசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும், சம்பவம்தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.