மீண்டும் வன்முறை கும்பல் அட்டகாசம் மருதனார் மடத்தில் வீபுகுந்து வன்முறை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளது.

வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article