கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (மே 20) ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
சரியான நேரத்தில் பரீட்சைகளை நடத்தி பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை. பின்னர், பொருளாதார நெருக்கடி வலுவடைந்ததால், கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை சுமூகமாகியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் வழமை போல நடத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.