மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பானகலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண  மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல்தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்டச்  செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்நேற்றையதினம் (நவம்பர் 19) யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில்நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்அவர்கள் ஏற்கனவே கிராம ரீதியாக  தெரிவு செய்யப்பட்ட  70  புலம்பெயர்தொழிலாளர் சங்கங்கள்  காணப்படுவதாகவும் அதன் வெளிப்பாடாக மாவட்டமட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கம்  உருவாக்குதலை நோக்கமாகக்கொண்டு இக்கலந்துரையாடல் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா். மேலும்வெளிநாடுகளுக்கு செல்வோா் அதிகமாகக் காணப்படுவதாகவும்உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தல் குறைவாகவே உள்ளதெனவும் இதன் நோக்கத்தை சரியான முறையில் அடையாளப்படுத்தி நலன்சாா்விடயங்களை செயற்படுத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இணைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்ததோடு  , புதிதாக உருவாக்கப்பட்டயாழ்ப்பாண  மாவட்ட    புலம்பெயர் தொழிலாளர் சங்கத்திற்கு தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட வெளிநாட்டுவேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோத்தர் ,

பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக   புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும்செயலாளர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி  வந்தவர்கள், வெளிநாடு செல்லவுள்ள நபர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article