மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்தகைமை கற்கையை பூர்த்தி செய்த மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வோடு குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்   தர்ஷனி கருணாரத்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

கெளரவ விருந்தினராக உள்நாட்டு இறைவரித்திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.மயூரி கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா,  தொழிற்பயிற்சி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் , சமூக சேவை உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், நிகழ்வின் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article