மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி சிறப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்றைய தினம் (13.10) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர்

D.C. அரவிந்தராஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்கு வருகைதந்த விருந்தினர்கள், மாற்றுத்திறனாளிகளின் இசைக்குழுவினரின் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, வடக்கு மாகாணக் கொடி மற்றும் மாவட்டக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

கடந்த 9ஆம் திகதியும் இன்றைய தினமும் இணைந்து மொத்தம் 157 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில்  யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்தையும்,  கிளிநொச்சி மாவட்டம்  இரண்டாம் இடத்தையும்,  முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

Share this Article
Leave a comment