மாதகலில் படகு விபத்துக்கு உள்ளானதில் கடற்தொழிலாளி கடலில் மூழ்கிமாயம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில்கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலுக்காகபடகில் இன்றைய தினம் (செப். 04) புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்றுஇருந்தனர்.

அந்நிலையில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கிய நிலையில் ஒருவர் கரையைநோக்கி நீந்தி வந்த வேளை, சக கடற்தொழிலாளர்கள் அவரை மீட்டு கரைசேர்ந்தனர்.

காணாமல் போன கடற்தொழிலாளியை, கடற்தொழிலாளர்கள், கடற்படையினர்கடலில் தேடி வருகின்றனர். நாகராசா பகீரதன் என்ற 22 வயது இளைஞனேஇவ்வாறு காணாமல் போயுள்ளார்.

Share this Article