முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மல்லாவி பிரதேசத்தில் “மகா அறிவகம்” எனும் மும்மொழி முன்பள்ளி நிலையம் திங்கட்கிழமை (16/02) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை வழங்கும் நோக்கில் இந்த முன்பள்ளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பருவத்திலேயே மொழித்திறன், ஒழுக்கம், சிந்தனைத்திறன் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் இந்த முன்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சமூக பங்களிப்பின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இம்முயற்சி பார்க்கப்படுவதுடன், இன, மத, மொழி வேறுபாடுகளை கடந்து, குழந்தைகள் ஒன்றிணைந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்கி நாட்டின் எதிர்கால ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என்பதே இதனூடான எதிர்பார்ப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.