மலையகத்தில் 2,000 வீட்டுப் பத்திரங்கள் கையளிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள்வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஞயிற்றுக்கிழமை(ஒக்.12) காலைபண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் 10 ஆயிரம் வீடுகள் திட்டத்தின்நான்காவது கட்டமாக 2ஆயிரம் பயனாளர்களுக்கு வீட்டு பத்திரங்கள்வழங்கப்பட்டுள்ளன.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற கருப்பொருளின் கீழ் நாட்டில்மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், செயற்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக தொழிலாளர்களுக்கு ஒருவீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல்,  நாட்டிற்கு சேவையை வழங்கும்மரியாதைக்குரிய குடிமகனாக அவர்கள் மாறுவதற்கான அடித்தளமாகவும்இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படைவசதிகளுடன் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை வழங்குவதும்இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த வீடுகளை வழங்குவதற்கான சரியான வழிமுறையின் கீழ் பயனாளர்கள்தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article