
மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர் களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று (03.03) இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுமார்- 10 ஆண்டுகளின் பின்னர் மருத்துவமனை மேற்பார்வையாளர்களின் பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
