மரண அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மரண அறிவித்தல்!- (குணராசா தனுசன்)

நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணராசா தனுசன் நேற்றுமுன்தினம் (30.10.2023) திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் குணராசா – புஸ்பராணி தம்பதியரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பரமநாதன் மற்றும் சரஸ்வதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

தயாளன் – மஞ்சுளா, டினேஸ், நிஷாக், ஜிவிந்தன், நிரூஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார். தர்மலிங்கம் – பிறேமா, புண்ணியமூர்த்தி – சந்திரகலா, பேரின்பநாதன் – சிவலதா, கேதீஸ்வரன் – கேதீஸ்வரி (தபாலதிபர் – வவுனியா தபாலகம்), நாகேஸ்வரி – காலஞ்சென்ற மரியதாஸ், வசந்தமலர், காலஞ்சென்ற கமலாவதி மற்றும் நாதன், காலஞ்சென்ற விசயகுமாரி – செல்வராசா, ஜசந்தினி (பல்கலைக் கழக ஊழியர்) காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் இந்திராணி – றமணன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

கனகராசா – கௌரி, கேதீஸ்வரன் – சயந்தினி ஆகியோரின் பெறாமகனும் ஆவார். டுவிக்சன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02.11.2023 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக உடல் சாமிப்பட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-
குடும்பத்தினர்.

Share this Article