மரண அறிவித்தல் (திரு.நாகநாதி பாலசிங்கம்,திருமதி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பாண்டியன்குளம் செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ் சென்ற அப்பாக்குட்டி நாகநாதி தம்பதியரின் புதல்வன் நாகநாதி பாலசிங்கம் என்பவரும் மற்றும் திருமதி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை என்பவரும் கடந்த 22.04.2023 இல் அகால மரணமானார்கள்.

ஜீவா (காலஞ்சென்ற), ராஜி (காலஞ்சென்ற) ஆகி யோரின் அன்புப் பெற்றோரும். பரணியின் (பிரதேச சபை – பாண்டியன்குளம்) மாமனாரும் மாமியாரும். கேதுசன், கோபிநாத், வினோயா. அட்சகி ஆகியோரின் அன்பு பேரன்மாரும் ஆவார். திரு. நாகநாதி பாலசிங்கம் (அன்னார்). சிந்தாமணி (கனடா). புவனேஸ்வரி (பாண்டியன்குளம்). கடாட்சம் (லண்டன்). சிரோன்மணி (பாண்டியன்குளம்), வைத்திலிங்கம் (கனடா), சபாரட்ணம் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் – யாழ்ப்பாணம்). லோகேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும். கணபதிப்பிள்ளை (கனடா). பேரம்பலம் (பாண்டியன் குளம்), சகுந்தலாதேவி (லண்டன்). சிவதாஸ் (பாண்டி யன்குளம்), குணலட்சுமி (கனடா), ஜெயந்தி (ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர் கூட்டுறவு
திணைக்களம் – யாழ்ப்பாணம்), நடராசலிங்கம் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்.

திருமதி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (அன்னார்) காலஞ்சென்ற நாகம்மா மற்றும் பூரணம் (மன்னார்), காலஞ்சென்றவர்களான கந்தையா. நாகசுந்தரி, சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சேதுபதி. கனகர், கமலம், கார்த்திகேசு, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னார்களின் இறுதிக்கிரியைகள் 36/1. பிரம்படி வீதி, கொக்குவில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நாளை (26.04.2023) புதன்கிழமை நடைபெற்று புகழுடல்கள் முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

இல. 36/1, பிரம்படி வீதி, கொக்குவில் யாழ்ப்பாணம்.
தொடரபுக்கு: 021 222 7759
தகவல்: குடும்பத்தினர்.

Share this Article