மன்னார் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த 31 வயதுடைய பெண் ஒருவர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பெண்ணின் இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் 9 கோடி ரூபா வைப்புச் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தைக் கொண்டு, மன்னார் நகரில் ஒரு பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மாடி சொகுசு வீடு மற்றும் ஐந்து கடைகளைக் கொண்ட வணிகக் கட்டிடம் ஆகியவற்றை வாங்கியுள்ளதுடன்
சுமார் 360 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு அதிநவீன சொகுசு வாகனம் ஆகியவையும் இவரிடமிருந்து முடக்கப்பட்டுள்ளன.
கடத்தல் தங்கம் மற்றும் பணத்தை அடகு வைத்தும், விற்றும் சட்டபூர்வமான பணமாக மாற்ற முயன்றது விசாரணையில் அம்பலமாகியதுடன் 2019 முதல் 2023 வரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்திய ஒரு முக்கிய புள்ளியின் நெருங்கிய உறவினரே இந்த இளம்பெண் என்பது உறுதியாகியுள்ளது.
இதன் பின்னணியில் உள்ள ‘பெரிய தலைகள்’ குறித்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன்
தற்போது இவரது வங்கிக் கணக்குகள், சொகுசு வீடு மற்றும் வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.