யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலைசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவைரமுத்து சாந்தலிங்கம் (வயது54) என்பவரே இவ்வாறு கொலையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்துவந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டநிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில்,
இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர்எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டிபோட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளைதம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.