மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பழகி வருவதை காணலாம் – ஜனாதிபதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாகஇல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாதஅரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கதெரிவித்துள்ளார்.

 கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அரசியலில் ஈடுபடும் உரிமையைமதிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்டஅனைத்து மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.

தற்போதைய தலைமுறையினருக்காக மீண்டும் ஒருபோதும் போரை நடத்தாதஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுவோம்.

ஒரு நாடு முன்னேறுவதற்கு மிக முக்கியமான விடயம் பொருளாதாரஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதாகும்.”

ஆனால் எங்களுக்கு நிலையற்ற பொருளாதாரம் இருந்தது. பொருளாதாரம்குறித்து பெரும் சந்தேகம் இருந்தது.

எனினும் எங்கள் நிர்வாகத்தின் போது, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாகஉறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை மக்கள் ஒன்றுகூடி உற்சாகத்துடன்கொண்டாடிய ஆண்டாகும்.

மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு பழகி வருவதை நாம் காணலாம்.” என்றார்

Share this Article