மகாஜனக் கல்லூரி புதிய கட்டிடத் திறப்பும், அடிக்கல் நாட்டலும்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில  ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு மற்றும் நூலகம் உள்ளிட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 127.46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் கல்லூரியில் நேற்று (04.08) புதன்கிழமை பாடசாலை அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் முறைப்படியே வரவேற்கப்பட்டு, முதலில் கட்டடத் திறப்பு விழாவும், அதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றதைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலன், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share this Article
Leave a comment