மகஜனக் கல்லூரி எதிர் யூனியன் கல்லூரி அணிகள் தேசிய உதைபந்தாட்டத்தில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசியமட்ட உதைபந்தாட்ட  போட்டியில்  தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் 14  வயதின்  கீழ்  பெண்கள்  அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.02.) காலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று  இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது

தேசியமட்ட உதைபந்தாட்ட அரை இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரியின் பெண்கள்  அணி  அரை இறுதிப் போட்டியில் பொலநறுவை றோயல் கல்லூரியுடன்  மோதி 06:03  என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அதேபோன்று மகஜனக் கல்லூரி

அணி களுத்தற ஸ்ரீ சிவாலி மகா வித்தியாலயம் 11:00 என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந் நிலையில் இறுதிப்போட்டி  நாளையதினம் (11/02)ஆம் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை  மகாஜனக் கல்லூரி அணியுடன்  யூனியன் கல்லூரி  அணி மோதவுள்மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படுகின்ற 14 வயதுப் பிரிவினர்களுக்கான சமபோச வெற்றி கிண்ணத்தில் மகஜனக் கல்லூரி கல்லூரி 14 வயது பெண்கள் அணி எதிர் யூனியன் கல்லூரி அணி ஆகிய இரு அயல் பாடசாலைகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்கள் என்பதும் பெருமைக்குரிய விடையமாகும்.

Share this Article