பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணிக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது

நேற்று (30.05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால்

அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment