யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (06.02.2026) யாழ். நல்லூரிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான சேவைக்கு மதிப்பளிக்குமுகமாக யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தால் ‘எம் மண்ணின் வானிலை வல்லோன்’ சிறப்பு விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.