பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ் பண்பாட்டு மையம்.!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டுமையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என ஜனவரி 18 சனிக்கிழமைஅன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம்செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்தெரிவித்ததுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம்வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ்மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article