பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்புக் காவல்துறை அதிரடிப்படைமற்றும் சிறைச்சாலையின் சிறப்புக் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டுநடவடிக்கையில், கைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் சார்ஜர்கள் உள்ளிட்டகுறிப்பிடத்தக்களவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான கைதிகளின் வசம்இருந்ததாக நம்பப்படுகிறது.
இதன்போது 28 ஸ்மார்ட்போன்கள் (கைபேசிகள்)30 சிம் அட்டைகள், 35 சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது .
இந்தச் சோதனையானது சிறை வளாகத்திற்குள், பாதாள உலகக் குழு மற்றும்போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளிகளாக அறியப்படும் கைதிகளின்அறைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.