பூசா சிறைச்சாலையில் குழப்பம் – சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து வேறு சிறை அறைகளுக்கு மாற்ற முற்பட்டபோதே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடமாற்றங்களுக்குக் கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, இதன்போது கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு இவ்வாறு காயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article
Leave a comment