புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயப் பொங்கல் உற்சவ முன்னாயத்தக் கூட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம்(21/02) நடைபெற்றது.

​இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 01.04.2026 அன்று பிரதான பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

​பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பற்றியும், அரச திணைக்களங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை இணைந்து திருவிழா காலப்பகுதியில் தடையற்ற சேவைகளை வழங்குவது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

​கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், கண்டாவளைப் பிரதேச  செயலாளர் பிருந்தாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), ஆலய நிர்வாகத்தினர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article