புலமைப்பரிசில் பரீட்சை மேன்முறையீடு நாளை முதல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடையமேன்முறையீடுகளை நாளை (செப். 09) முதல் முன்வைக்க முடியும் எனஇலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் செப். 22 ஆம் திகதி வரையில் ஒன்லைன்ஊடாக விடைத்தாள் மதீப்பீடு தொடர்பான மேன்முறையீட்டை முன்வைக்கமுடியும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகேதெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப்பயன்படுத்திhttps://onlineexams.gov.lk/eic/index.php/clogin/என்றஇணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மேன்முறையீட்டைச்சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டுள்ளார்.

Share this Article