2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்நள்ளிரவு (செப்.03) வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில்மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.