புனித தலைப்பிறை தென்படவில்லை..! ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21/03) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19/03) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதனால் நாளை நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை மறுதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article