நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான அரசதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 10) இடம்பெற்றது.
இதுவரையில் 10 அரசதிபர் வெற்றிக் கிண்ணம் நடைபெற்றுள்ளது. இதில் முதன் முறையாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியை கொளரவிக்கும் முகமாக பிரதேச செயலகம் சார்பாக அரசதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளும் நேற்று கௌரவிக்கப்பட்டதோடு மெய்ச்சுரை சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் கலந்து சிறப்பித்ததுடன் வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்ட புள்ளி விபரவியலாளர், புதுக்குடியிருப்பு உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.