புதிய சட்டமா அதிபராக கே.ஏ.பாரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ( ஜூன் 12) நியமித்துள்ளார்.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர்
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

Share this Article