புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் கடற்தொழில் துறை அமைச்சருமான கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவா்கள் தெரிவித்துள்ளர்.
குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (டிசம்பா் 19) நேரடியாக சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது குறித்த பகுதி இறங்குதுறை ஆழமாக்கப்பட வேண்டும் என்றும் சுமார் 300 மீற்றர் நீளமும் 50 மீற்றர் அகலமும் கொண்ட அணை கட்டப்பட வேண்டும் என்றும் அப்பகுதி கடற்றொழிலாளர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கோாிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சா் அவா்கள் மிக விரைவாக இவ் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான முயற்சியினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளாா்.