புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக மாற்ற கோரிக்கை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதுடன்  இவற்றில் ஏற்படும் மரணங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது  

பிரதேச செயலக பிரிவுவாரியாக பார்க்கும் போது சாவகச்சேரியில் 14, நல்லூரில்07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.

எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்என நேற்று (ஜனவரி31) இடம்பெற்ற யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

Share this Article