பீடத்துக்குள் நுழைவதற்குத் தடை – விடுதிகளை விட்டு வெளியேறுமாறும்உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

றுகுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம்,மூன்றாம் வருடமாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

றுகுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டு மாணவர்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்துவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து குறித்த மோதலில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்த தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article