சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் பணியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் ஈடுபட்டது.
இந்தப் பணியின் காரணமாக கிராமங்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை நேற்று வலி வடக்கு பிரதேச சபையின் செயலாளரிடம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி, எமது உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நச்சு இரசாயனங்கள் பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறி, நடைமுறையில் அனைவரின் திசுக்களிலும் இரத்தத்திலும் உள்ளன.
அவற்றின் வெளிப்பாடு பிறப்பு குறைபாடுகள், கட்டிகள், நாளமில்லா அமைப்பின் தொந்தரவு, சமரசம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற கோளாறுகளுடன் தொடர்புடையது.
இவ்வாறு பல வழிகளில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பொருட்களை கிராமங்களில் சேகரித்து அவற்றை நேற்று மீள் சுழற்சிக்காக வலி வடக்கு பிரதேச சபையிடம் ஒப்படைக்பட்டுள்ளது.