பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 ஆண்டிற்கான  சிறுவர்  தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழைபதிவு செய்யாத சிறுவர்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவைஇடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் 01 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரை யாழ் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமானதமருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதுவரை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை பதிவு செய்வதற்காக உரிய  ஆவணங்களுடன் வருகை தந்து பிறப்புச் சான்றிதழைபதிவு செய்யுமாறு மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article