பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 ஆண்டிற்கான  சிறுவர்  தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழைபதிவு செய்யாத சிறுவர்களுக்கான  நடமாடும் சேவையானது  யாழ்ப்பாண மாவட்டஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  இன்றையதினம் ( ஒக்டோபர் 01) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரை மாவட்டச் செயலககேட்போா்  கூடத்தில் நடைபெற்றது.

இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 41 சிறுவர்களுக்கும், உத்தேச வயதுப்பத்திரம் 05 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 11 பேருக்கும், இறப்பு பதிவு 03 பேருக்குமாக 60 பயனாளிகள் பயனடைந்தார்கள்.


இதன்
போது கருத்து தெரிவித்த  அரசாங்க அதிபர் அவர்கள் சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு  இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட  நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும்,  இப்பிறப்பு சான்றிதழ் ஆவணம் ஒருவருக்கு அடிப்படையானது  எனவும், பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவமானது எனவும் தெரிவித்தார். மேலும், சில பிறப்புச் சான்றிதழ்களை பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள் மத்தியிலும், இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற மாவட்டப்  பிரதி பதிவாளர், பிரதேச செயலகங்களை சேர்ந்தபதிவாளர்கள், உதவிபதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத்தெரிவித்திருந்தார்.


இந்
நிகழ்வில், பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மாவட்ட  மற்றும்  பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும்  சிறுவர்கள் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டிருந்தார்கள்.

Share this Article