நெடுந்தீவு 12-ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பி. விக்டர் ஜெயசூரிய (ஜெயம்) அவர்கள் நேற்று புதன்கிழமை (17 டிசம்பர் 2025) காலமானார்.
அன்னார் நிர்மலா அவர்களின் அன்பிற்குரிய கணவரும்,
மேரி ஜீன், மேரி ஜனா, ஜெலஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி இடம்பெற்று, பின்னர் பூதவுடல் நல்லடக்கத்திற்காக நெடுந்தீவு மத்தி சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்