இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீரின் விலைவும் உயர்ந்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைப்படி, 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பொதியின் விலை 250 ரூபாவாலும் உயர்ந்துள்ளது.
பால்மா விலை உயர்ந்ததையே காரணமாகக் கொண்டு பால் தேநீர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.