பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிமேஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த செயற்றிட்டத்திற்காக மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் 7இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பாதணிகளுக்கான வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.