பாடசாலை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் – முறையிட தொலைபேசி இலக்கம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில்முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும்.

எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால்பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள்தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல்முகவரி ஊடாகவும் முறையிட முடியும்.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குசென்றும் ( இல. 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஶ்ரீ ஜயவர்தனபுர) முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைதெரிவித்துள்ளது.

Share this Article