வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர்.
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(ஜூன் 20) காலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 9.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து காலை 10.30 மணிக்கு இருப்பிடத்தினை வந்தடைந்தது.
தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இன்று மாலை 4.00 மணிக்கு பச்சை சாத்தி அம்பாள் இரத அவரோகணம் இடம்பெறவுள்ளது.