நாட்டில் அனைத்து பல்கலைக்கழகளினதும் 2 ஆம், 3 ஆம் ஆண்டுகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் இன்று (ஜீலை 06) குறிப்பிட்டார். 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கழைக்கழகங்களை திறப்பது தொடர்பாக துணைவேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் எனவும் பேராசியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். முதலாம் கல்வியாண்டு மாணவர்கள் கல்வி தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற ரிதீயில் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.