பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது விமான சேவை ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது புதிய விமான சேவைஇண்டிகா (Indiga)  விமான சேவை கடந்த 01 ஆம் திகதி தனது சேவையினைஆரம்பித்தது.

சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமான சேவை சுமார் 50க்கும்மேற்பட்டவர்களுடன்   பி.ப 3.05 மணியளவில் பலாலியை வந்தடைந்தது.  முதல்தடவையாக வருகை தரும் பயணிகளுக்கு தொழில்துறை நிறுவனத்தின்பங்களிப்புடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மற்றும் சுற்றுலா ஊக்கப்படுத்தல்கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்    யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன்   அவர்கள்  கலந்து கொண்டு இச்சேவை மூலம்  முதலில் வரும் சுற்றுலாபயணிகளுக்கு நினைவுப் பொதிகள் வழங்கி  வரவேற்றிருந்தார்.

இந்நிகழ்வில்    யாழ் .இந்திய துணைத்தூதுவர்,  Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர்  மாவட்ட  விமானப் படை அதிகாரிகள், தொழிற்துறைத் திணைக்கள  அதிகாரிகள், வடமகாண கலாசாரத் திணைக்களஅதிகாரிகள்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஹோட்டல்முகாமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்   ஆகியோா் பங்கு  பற்றியிருந்தனர்.

Share this Article