இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கும் வகையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசு நிவாரண நிதிக்காக 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.
இந்த நிதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

நிதி கையளிப்பு நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.