இலங்கைக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை (டிசம்பர் 28) யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பட்டு வேட்டியுடன் சென்றிருந்தார்.
இலங்கைக்காக சீனப் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உட்பட மூவர் கோட்டைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இவர்களின் இந்தப் பயணம் சுற்றுலா ரீதியானது என்று கூறப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் கோட்டைக்குப் பொறுப்பான அலுவலர்களோ, அதிகாரிகளோ அங்கு இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.