இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தினை சேர்ந்தவர்களே நேறறு யாழ்ப்பாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் நாடு முழுவதும் 271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி விடுத்துள்ள புள்ளி விபரத்தின் படி யாழ் மாவட்டத்தில் 77 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 64 பேரும். கம்பஹா மாவட்டத்தில் 27 பேரும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியோர் 20 பேர் களுத்துறையில் 15பேர், இரத்தின புரியில் 10பேர் மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 09 பேர், பதுளை மாவட்டத்தில் 06 பேர் கண்டி மாவட்டத்தில் 04 பேர் புத்தளம், முல்லைத்தீவு மாத்தளை மாவட்டங்களில் தலா 03பேர், காலி மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.