நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர்13) தொடக்கம் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாகவே இந் நேரமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதன்படி தினசரி மாலை நேர சேவை
நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து மாலை 4.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கிப் புறப்படும்.
ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும்.
குமுதினி படகு சேவையில் மாற்றமில்லை என்பதுடன் இந்நேர அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டால் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.