நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 07) வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்துமத குரு புவனேந்திரசர்மா மற்றும் வித்தியாலய ஆசிரியரும் அருட்தந்தையுமாகிய சோபன் ரூபஸ் அடிகளார் ஆகியோரின் ஆசி மற்றும் இறை வழிபாட்டுடன் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பகிர்ந்துகொண்டனர்.