நெடுந்தீவில் வெள்ளத்தால் கால்நடைகளை பறிகொடுத்த குடும்பங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் ஏற்பட்ட  வெள்ளப் பாதிப்பினால் பெருமளவு கால்நடைகளும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

காணிகளில் அடைத்து வைக்கப்பட்ட மற்றும் வெளியில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் இவ்வாறு வெள்ளத்தில் சிக்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கால்நடைகளே வாழ்வாதாரமாக  கொண்ட குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள  கால் நடைகளும் நோய் வாய்ப்பட்டும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன

இது தொடர்பில் கால் நடை வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்து இழப்பீட்டினை பெற ஆவன செய்வதுடன் நோய் பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article