நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின்கட்டுமானங்களை பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று வடமாகாண ஆளுநர் நிலைமைகளை நேற்றையதினம் (மார்ச் 05) பார்வையிட்டிருந்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை நேற்றையதினம் (மார்ச் 05) வடமாகாண ஆளுநர் மேற்கொண்டிருந்த போதே பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த காலத்தில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் திட்டத்தில்முன்னெடுக்கப்பட்ட பனங்கள் போத்தலில் அடைக்கும் நிலையத்தையும் ஆளுநர்பார்வையிட்டதுடன் மதுவரி அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறாமையால்போத்தலில் அடைக்கும் நிலையத்தின் பணி தொடர்ந்து முன்னெடுக்க முடியாதநிலைமை இருப்பதும் இதன்போது மக்களால் ஆளுநருக்குசுட்டிக்காட்டப்பட்டிருந்தது.