தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் அளவெட்டி, மாவிட்டபுரம் ஆகிய இரு இடங்களிலுள்ள நெசவு சாலைகளில் பயிற்சியாளர்களாக இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களாக இணைந்து தொழில் முயற்சியாளர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து பயன் பெறாலம்.
வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் தொழில்த்துறை திணைக்களத்தினால் இந்த இரு நெசவு சாலைகளும் இயக்கப்படுகிறது.
முதல் 6 மாதம் முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும் பயிற்சி காலத்தில் நாள் ஒன்றிக்கு ரூபா 200 ஊக்க தொகையாக வழங்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட பயிற்சி காலத்தில் பயிற்சிக்கு தேவையான சகல வழிகாட்டல்களும் தகுதியான ஆசிரியரால் வழங்கப்படுவதுடன் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பயிற்சி நிறைவில் நல்லதொரு நெசவாளராக மாறுவதுடன் தமது சிறந்த நாளாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ள வாய்பு ஏற்படுத்தித் தரப்படும்.
50 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலாரும் இப் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள முடியும். எனவே தொழில் வாய்ப்பினை தேடுவோர் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி ஒரு தொழில் முயற்சியாளராக மாறுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு 0773080358 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.