நீதிமன்றில் தேயிலைச் சாயமாக மாறிய மதுபானம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல் தொகையை நீதிமன்றஉத்தரவிற்கமைய அழிக்கும் சந்தர்ப்பத்தில் மதுபானத்திற்கு பதிலாக குறித்தபோத்தல்களில் தேயிலைச் சாயம் கலந்த நீர் மற்றும் பழுப்பு சாயம் நிறைந்த நீர்இருந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக அரசஇரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்புபிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று கொழும்பு குற்றத் தடுப்புபிரிவிற்கு உத்தரவிட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் களஞ்சியஅறையில் வைக்கப்பட்டிருந்த 81 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 150 பியர் போத்தல்களை இவ்வாறு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்வைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட குறித்த மதுபான தொகையை அழிக்குமாறுகொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதிஉத்தரவிட்டிருந்தார்.

அவற்றை அழிக்க முயற்சித்த போது, அதில் அசல் மதுபானம் அன்றி அவற்றில்வேறு பானம் இருந்தமை நீதவானினால் கண்டறியப்பட்ட நிலையில்போத்தல்கள் மீள சீல் வைக்கப்பட்ட நீதிமன்ற களஞ்சிய அறையில்வைக்கப்பட்டன.

மதுபானத்திற்கு பதிலாக குறித்த போத்தல்களில் தேயிலைச் சாயம் கலந்த நீர்மற்றும் பழுப்பு சாயம் நிறைந்த நீரை கலந்தது யார் என்பது குறித்து உடனடிவிசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share this Article